Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரானில் ஆர்ப்பாட்டம் - அடக்குமுறை நடவடிக்கைகள் மீது உயர்மட்ட விசாரணை நடத்தவிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனம்

வாசிப்புநேரம் -
ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை மன்றம் ஈரானின் அடக்குமுறை நடவடிக்கைகள் மீது உயர்மட்ட விசாரணையை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்ட 22 வயது மஹ்சா அமினி (Mahsa Amini) மாண்டதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலிருந்து ஈரானில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

போராட்டங்களில் 300 பேர் மாண்டதாகவும் 14,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்படுகிறது.

விாரணையை நடத்தும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முடிவை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் வரவேற்றுள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை நிறுவனம் புரிந்துவைத்திருப்பதை அது காட்டுவதாக அவர் சொன்னார்.

ஆனால் சீனா அந்த முடிவை எதிர்த்துள்ளது.

மற்றொரு நாட்டின் விவகாரங்களில் மனித உரிமையைப் பயன்படுத்தி தலையிடுவதற்கு அது எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்