Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரானில் சாலை விபத்து - மாண்டவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டவர்கள்

வாசிப்புநேரம் -
ஈரானின் தென்கிழக்கு மாநிலமான சிஸ்தான் - பலுசிஸ்தான் (Sistan-Baluchistan) மாநிலத்தில் 2 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் மாண்டனர். 14 பேர் காயமுற்றனர்.

மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள் என்று IRNA செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஈரானில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பலர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஈரானிலுள்ள சாலைகள் மிகக்குறைவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டும் ஈரானில் சாலை விபத்துகளில் 20,000க்கும் அதிகமானோர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஈரானின் மத்திய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.

 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்