ஹோர்முஸ் நீரிணை - பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் ஈரான்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Stringer TPX IMAGES OF THE DAY
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது உறுதி செய்யப்படும் என்று ஈரானிய புரட்சிப்படையின் கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவதால் அது சாத்தியமாகும் என்று அது குறிப்பிட்டது.
கடல்பாதையில் சிக்கியிருக்கும் கப்பல்கள் அங்கிருந்து வெளியேற அமெரிக்கா தனது நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், ஈரான் தரப்பிலிருந்து வந்துள்ள முதல் அறிவிப்பு இது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யப் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரானியப் புரட்சிப்படை தெரிவித்தது.
அந்த நடைமுறைகள் என்ன என்பது குறித்த விரிவான விளக்கங்களை அது அளிக்கவில்லை.
கடல் வழியைப் பயன்படுத்தும்போது ஈரானின் விதிமுறைகளை மதித்து நடந்துகொண்ட கப்பல் உரிமையாளர்களுக்கும் மாலுமிகளுக்கும் புரட்சிப்படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

ஆதாரம் : Reuters