வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கும் ஈரான்
AFP
This audio is generated by an AI tool.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தாக்கியுள்ளது.
குவைத் (Kuwait), பஹ்ரைன் (Bahrain) ஆகிய நாடுகள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பஹ்ரைனில் இன்று (8 ஜூன்) மூன்று முறை ஏவுகணை அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
மறைவிடங்களை நாடும்படி மக்கள் கேட்டுகொள்ளப்பட்டனர்.
குவைத் ஈரானின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தது.
மீண்டும் மீண்டும் தாக்கும் ஈரானுக்கு எதிராக தனது அரசுரிமையைத் தற்காக்கும் உரிமை உள்ளதாகக் குவைத் எச்சரித்தது.
அமெரிக்காவும் ஈரானும் மாறி, மாறித் தாக்குதல் நடத்தும் வேளையில் பஹ்ரைனும், குவைத்தும் குறிவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஈரானில் உள்ள 80க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்கா சொன்னது.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்களைத் தாக்கயதற்குப் பதிலடி கொடுத்ததாக அமெரிக்கா கூறியது.