Skip to main content
ஈரானுடன் பேச்சு தொடரும்: அதிபர் டிரம்ப் உறுதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானுடன் பேச்சு தொடரும்: அதிபர் டிரம்ப் உறுதி

வாசிப்புநேரம் -
ஈரானுடன் பேச்சு தொடரும்: அதிபர் டிரம்ப் உறுதி
(படம்: REUTERS/Jonathan Ernst)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவிடம் (Benjamin Netanyahu) கூறியிருக்கிறார்.

அணுச்சக்தி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசும் என்று திரு டிரம்ப்  சொன்னார்.

திரு டிரம்ப்பும் திரு நெட்டன்யாஹூவும் 3 மணி நேரம் சந்திப்பு நடத்தினர்.

சந்திப்பில் எந்த திட்டவட்டமான முடிவும் எடுக்கப்பபடவில்லை என்று திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுமா இல்லையா என்பதைப் பார்க்க  பேச்சுவார்த்தைகள் தொடரவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகத் திரு டிரம்ப் சொன்னார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்