Skip to main content
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி தொடரும்: ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி தொடரும்: ஈரான்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி தொடரும்: ஈரான்
(கோப்புப் படம்: AP/Khalil Hamra)
வெளியீடு : 05 Feb 2026 09:42AM புதுப்பிப்பு : 05 Feb 2026 11:58AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரான் தனது அணுச்சக்தித் திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தை அமெரிக்காவுடன் திட்டமிட்டபடி தொடரும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), அந்த வட்டாரத்தில் தனது ராணுவப் படை பலத்தை வலுப்படுத்தியுள்ளார்.

ஈரானின் உச்சத் தலைவரைக் கவனமாக இருக்கும்படி அவர் எச்சரித்திருந்தார்.

பேச்சுவார்த்தை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

எனினும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நாளை (6 பிப்ரவரி) ஓமானில் நடைபெறும் என்று ஈரான் உறுதிப்படுத்தியது.

ஈரானில் அண்மையில் நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அமெரிக்கா ஈரான் மீது நெருக்குதலை அதிகரித்துவருகிறது.

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று திரு டிரம்ப் கூறியிருக்கிறார்.

ஈரான் புதிய அணுச்சக்தித் தளத்தைத் தொடங்க எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு (2025) ஜூன் மாதம் ஈரானின் அணுச்சக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்