Skip to main content
"ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும்"

வாசிப்புநேரம் -
"ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும்"
(படம்: Fabrice COFFRINI / AFP)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும் என்று கூறியுள்ளார். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்து ஒரு வாரம் ஆகிறது.

குறிப்பிட்ட சில நாடுகள் சமரச முயற்சிகளைத் தொடங்கியிருப்பதாக ஈரானிய அதிபர் தெரிவித்த சில மணி நேரத்தில் திரு டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது. 

ஈரான் சரணடைவதைத் தவிர இந்தப் பூசலுக்கு வேறெந்தத் தீர்வும் இல்லை என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

திரு டிரம்ப்பின் புதிய கோரிக்கை சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

ஈரானின் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தமக்குப் பங்கிருக்க வேண்டும் என்றும் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் அந்தப் பதவிக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் திரு டிரம்ப்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானை நல்ல நிலைக்குக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்