ஈரானில் 90 இடங்களில் தாக்குதல்
வாசிப்புநேரம் -
(படம்: AFP PHOTO / UGC / UNKNOWN)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் மேற்குப் பகுதியில் மூவர் மாண்டனர்.
ஈரானின் அதிகாரத்துவ ஊடகம் அதைத் தெரிவித்தது.
ஆஹ்வாஸ் (Ahvaz) நகரின் வெளிப்புறப் பகுதிகளில் நடந்த தாக்குதலில் மேலும் சிலர் காயமுற்றனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.
இரு தரப்பும் 2ஆவது நாளாகத் தாக்குதல் நடத்துகின்றன.
சண்டைக்குக் காரணம் ஹோர்முஸ் நீரிணை.
நீரிணை தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்கிறது ஈரான்.
அதை ஏற்க மறுக்கிறது அமெரிக்கா.
நீரிணையில் சில கப்பல்களை ஈரான் தாக்கியதை அடுத்து அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடங்கியது.
ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.
ஈரானில் சுமார் 90 ராணுவ இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது.
பதிலுக்குக் குவைத்திலும் பஹ்ரைனிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஆதாரம் : AFP