Skip to main content
எரிவாயுப் பாதிப்பில் அடுத்தது..ஹீலியம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எரிவாயுப் பாதிப்பில் அடுத்தது..ஹீலியம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கத்தாரின் இயற்கை எரிவாயுத் தளத்தின் மீது ஈரான் இந்த வாரம் தாக்குதல் நடத்தியது.

அது உலகளாவிய எரிசக்தித் சந்தைகளை மட்டுமல்லாமல் உலகளாவிய பொருள் விநியோகக் கட்டமைப்பையும் பாதிக்கும் எனும் அச்சம் எழுந்துள்ளது.

அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹீலியம் (helium) பல்வேறு நவீன தொழில்துறைகளுக்கு மிக முக்கியமானது.

உலகிலேயே ஹீலியத்தை எடுத்துக்கொண்டோமானால் மூன்றில் ஒரு பங்கைக் கத்தார் விநியோகிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் கூறுகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு போர் தொடங்கியதால் கத்தார் ஹீலியம் உற்பத்தியை நிறுத்தவேண்டியிருந்தது.

கத்தாரின் அரசுக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனம் ஹீலியம் ஏற்றுமதியை 14 விழுக்காடு வரை குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

உலகின் ஹீலியம் அளவில் 30 விழுக்காடு ஹோர்முஸ் நீரிணை வழி கொண்டுவரப்படுகிறது. ஈரான் போரால் ஹீலியம் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை நீண்டகாலத்துக்கு முடக்கப்பட்டிருந்தால் உலகப் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரச் சூழல் சரிவு காணலாம் அல்லது மந்தநிலை உண்டாகலாம் என்றார் திரு வோங்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்