Skip to main content
ஈரான் போர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான் போர் - அடுத்து என்ன நடக்கும்? பதறும் நாடுகள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானியத் துறைமுகத்துக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்துக் கப்பல்களையும் இடைமறிக்கப் போவதாய் அமெரிக்கா மிரட்டியுள்ளது. 

நிலைமை மோசமாகிறது, இனி என்ன நடக்கும்? 

மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சைமன் ஃபிராங்கெல் பிராட் (Simon Frankel Pratt) கூறுகிறார். 

தடுப்பு நடவடிக்கை சாத்தியமா? 

🚧 தடுப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்த  அமெரிக்காவிடம் வலுவான கடற்படை உள்ளது, அதனால் சாத்தியம் அதிகம். 

இருதரப்புக்கும் இருக்கும் சிக்கல்?

ஈரானுக்கு...

🚧 ஈரானின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டன. நிலைமை இன்னும் மோசமாகலாம். 

🚧 ஈரான், தனது ஆட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க எண்ணெய், பெட்ரோலிய வளங்களைச் சார்ந்துள்ளது. 

🚧 அவற்றை விற்க முடிந்தால்தான் ஈரான் கூடுதல் வருவாயைப் பெற முடியும். 

அமெரிக்காவுக்கு...

🚧 ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நடத்த முடிந்தாலும், ஆயுதங்களைத் தயார்படுத்த அதிக செலவாகும். 

🚧 அமெரிக்காவில் போருக்கு எதிர்ப்பு வலுக்கிறது

🚧 செலவுகள் அதிகரித்துள்ளதால் அமெரிக்காவும் போரை முடிவுக்குக் கொண்டுவரவே விரும்பும்.  

மற்ற நாடுகளுக்குப் பாதிப்பு?

சீனா, பாக்கிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் கப்பல்கள் தடுக்கப்படுவதால் அதிகம் பாதிக்கப்படும்.

இருப்பினும் அந்த நாடுகள் அமெரிக்காவுடன் ராணுவ மோதலில் ஈடுபடும் சாத்தியம் குறைவு.  

விரைவில் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் பரிந்துரைக்க வாய்ப்புண்டு.

இனி என்ன? 

நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump)  தெளிவாக்கியுள்ளார். 

"ஈரான் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் சீண்டப் பார்த்தால், அது நடக்காது," என்று அமெரிக்கத் துணையதிபர் JD வான்ஸ் (JD Vance) முன்னதாக எச்சரித்திருந்தார்.

சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 10 மணி முதல் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைத் தடுக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டியிருக்கிறது. 

உலக நாடுகள் அடுத்து என்ன நடக்குமோ என்று பதற்றத்துடன் காத்திருக்கின்றன. 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்