"லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பதில் நடவடிக்கை எடுப்போம்"
படம்: Ibrahim AMRO / AFP
This audio is generated by an AI tool.
அமெரிக்காவும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கும் நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
போர்நிறுத்த நிபந்தனைகளில் பலவற்றை இஸ்ரேல் மீறியிருப்பதாக ஈரான் சாடியுள்ளது.
இந்த நேரத்தில் இருதரப்புப் போர்நிறுத்தத்தைச் செயல்படுத்துவதும் பேச்சுவார்த்தை நடத்துவதும் நியாயமற்றதாக இருக்கும் என்று அது சொன்னது.
லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தாவிட்டால் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அது தெரிவித்தது.
போர்நிறுத்த இணக்கத்தில் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது முக்கிய அங்கம் பெறும் என்று அது சொன்னது.