"போரில் தலையிடவேண்டாம்!" - ஐரோப்பாவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஐரோப்பாவைப் போரில் தலையிடவேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அவ்வாறு தலையிட்டால் ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டின் தாக்குதலுக்கு இலக்காகும் என்று ஈரானிய வெளியுறவுத் துணையமைச்சர் கூறினார்.
சண்டையில் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் கூட்டுச் சேரும் நாடுகள் ஈரானின் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் சூளுரைத்தார்.
பேச்சுவார்த்தை நடந்துகொண்டிந்தபோதே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் திரு மஜிட் டேக்கேரவான்சி (Majid Takht-Ravanchi) கூறினார்.
அமெரிக்காவே போர் தொடுத்தது என்றும் ஈரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் அமெரிக்கர்களை நம்பமாட்டோம். அவர்கள் எங்களுக்கு மட்டும் நம்பிக்கை மோசடி செய்யவில்லை. அரசதந்திரத்துக்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளனர்," என்றார் திரு மஜிட் டேக்கேரவான்சி.