அமெரிக்கா தாக்கிய 3 ஈரானிய அணுச்சக்தித் தளங்கள்..சில தகவல்கள்
வாசிப்புநேரம் -

(படம்: Reuters)
அமெரிக்கா 3 ஈரானிய அணுச்சக்தித் தளங்களைத் தாக்கியது. ஈரானின் அணுத் திட்டத்தை முறியடிக்கும் இஸ்ரேலின் முயற்சியில் அமெரிக்காவும் சேர்ந்துள்ளது.
ஃபொர்டோவ் (Fordow), இஸ்ஃபாஹான் (Isfahan), நாதான்ஸ் (Natanz) ஆகிய 3 அணுச்சக்தித் தளங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் யுரேனியம் சேகரிக்கப்படுவதாகவும் அவற்றைக் கொண்டு ஈரான் அணுவாயுதம் தயாரிக்கப் போவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
அந்த அணுச்சக்தித் தளங்கள் குறித்துச் சில விவரங்கள்....
1. நாதான்ஸ் (Natanz)
ஈரானின் ஆகப்பெரிய யுரேனியத் (Uranium) தளம் இது. தெஹ்ரானுக்குத் தென்கிழக்கே சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் இதனைத் தாக்குவதற்குக் குறிவைத்திருந்தது.
இங்கு யுரேனியம் 60 விழுக்காடு வரை சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அவ்விடத்தின் நிலத்தடிப் பகுதியை அழித்ததாகச் சொல்கிறது.
2. ஃபொர்டோவ் (Fordow)
இது ஈரானின் மிக முக்கியமான அணுச்சக்தித் தளம். தெஹ்ரானுக்குத் தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நாதான்ஸ் போன்று பெரிதல்ல. இது 2007ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வருகிறது.
ஒரு மலையின் கீழ் புதைக்கப்பட்டு ஆகாய எதிர்ப்பு மின்கலன்களால் பாதுகாக்கப்படுகிறது. இது ஆகாயவழித் தாக்குதல்களைத் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
3. இஸ்ஃபாஹான் (Isfahan)
யுரேனியத்தை மாற்றும் முக்கிய ஆலை இது. தெஹ்ரானுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஆயிரக்கணக்கான அணு விஞ்ஞானிகள் அங்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது 3 சீன ஆய்வு அணு உலைகளும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. ஈரானின் அணுத் திட்டத்துடன் தொடர்புடையவை.
ஈரானிடம் வேறு பல அணுச்சக்தித் தளங்களும் உள்ளன. அவற்றைக் குறிவைக்கப் போவதாக அமெரிக்கா அறிவிக்கவில்லை.

ஆதாரம் : AP