உதவி நிலையங்களில் பாலஸ்தீனர்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Mahmoud Issa
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காஸா உதவி நிலையங்களில் பாலஸ்தீனப் பொதுமக்கள் தாக்கப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதிலிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு தமது படைகளுக்குப் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அது சொன்னது.
உதவி நாடிச் சென்ற சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவில் இயங்கும் காஸா மனிதாபிமான உதவி அறநிறுவனம், மே மாத இறுதியிலிருந்து அங்கு உதவி வழங்கி வருகிறது.
46 மில்லியனுக்கும் அதிகமான முறை உணவு வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் அறநிறுவனத்தின் இயக்கம் பாதுகாப்பற்றது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் குறைகூறினார். அதன் நடுநிலை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இஸ்ரேலிய ராணுவம் வேண்டுமென்ற அதன் நிலையங்களில் பொதுமக்களைக் குறிவைப்பதாக காஸா மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனை இஸ்ரேலிய ராணுவம் மறுத்தது.
உதவி நிலையங்களில் மாண்டோரின் எண்ணிக்கையை ஹமாஸ் மிகைப்படுத்திக் கூறுவதாக இஸ்ரேலிய ராணுவம் சொன்னது.

ஆதாரம் : Others