2 மாதத் தடைக்குப் பின் காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்கிறது இஸ்ரேல்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Hatem Khaled)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காஸாவுக்குள் அடிப்படைத் தேவைக்கு ஏற்ற அளவு உணவுப் பொருள்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
அங்குப் பசியால் நிலைமை மேலும் மோசமாவதைத் தவிர்க்க அந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் (Benjamin Netanyahu) அலுவலகம் தெரிவித்தது.
பஞ்சம் ஏற்பட்டால் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தொடங்கியிருக்கும் புதிய நடவடிக்கை பாதிக்கப்படலாம் என்று அது கூறியது.
ஹமாஸ் உணவைக் கைப்பற்றுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் செல்ல சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் தடை விதித்தது.
ஹமாஸ் அமைப்புக்கு நெருக்குதல் அளிப்பதற்காகத் தடை விதிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
ஆனால் காஸாவில் உணவு, சுத்தமான தண்ணீர், எரிபொருள், மருந்து முதலியவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு அமைப்புகள் எச்சரித்தன.
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தரைத் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

ஆதாரம் : AFP