Skip to main content
ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல்

வாசிப்புநேரம் -
ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல்
(கோப்புப் படம்: ATTA KENARE / AFP)
வெளியீடு : 07 Mar 2026 12:53PM புதுப்பிப்பு : 07 Mar 2026 04:21PM

ஈரான் மீது விரிவான தாக்குதல் மேற்கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகரில் அமைந்துள்ள அரசாங்கக் கட்டடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. 

இஸ்ரேல் தனது 50 போர் விமானங்கள்  மாண்ட உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) வீட்டுக்கு அடியில் இருக்கும் மறைவிடம் ஒன்றைத் தாக்கியதாகக் கூறியது.

தெஹ்ரான் (Tehran) நகரில் இருக்கும் மேராபாட் (Mehrabad) விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சமூக ஊடகத்தில் பரவும் காணொளிகளில் விமானம் ஒன்று தீப்பற்றி எரிவதையும் புகை சூழ்ந்திருப்பதையும் காணமுடிகிறது.

ஈரானின் ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் ஒன்று மேராபாட் விமான நிலையம்.  

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து இஸ்ரேலின் நடவடிக்கை வந்துள்ளது.

இந்நிலையில் ஈரான் பதிலுக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை  அனுப்புகிறது.

அவற்றை இடைமறிப்பதாக இஸ்ரேல் கூறியது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்