"பெய்ரூட் நகரை இஸ்ரேல் தாக்கினால் பெரும் போர் வெடிக்கும்"
வாசிப்புநேரம் -
REUTERS/Denis Balibouse
இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தினால் பெரிய அளவில் மீண்டும் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.
மத்திய கிழக்கு வட்டாரம் எங்கும் பெரும்போருக்கு அது காரணமாக அமைந்துவிடும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) சொன்னார்.
போரை நிறுத்துவதாக இருந்தால் லெபனானிலும் போரை நிறுத்த வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் பெய்ரூட் நகரைத் தாக்கினால் ஈரானியப் படைகள் இஸ்ரேலைத் தாக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேல், லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை மீதான தாக்குதலை விரிவுபடுத்த விரும்புகிறது.
இதற்கிடையே இஸ்ரேலும் லெபனானும் அமெரிக்காவில் 2ஆவது நாளாகச் சண்டைநிறுத்தம் தொடர்பில் பேச்சு நடத்துகின்றன.

ஆதாரம் : AFP