Skip to main content
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் - 6 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் - 6 பேர் மரணம்

(படம்: REUTERS/Ibraheem Abu Mustafa)

கத்தார் தலைநகர் டோஹாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர்கள் உயிர் பிழைத்ததாக அது சொன்னது.

நேற்று (9 செப்டம்பர்) டோஹாவில் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

கத்தாரும் வட்டார நாடுகளும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல் கத்தாரின் அரசுரிமையையும் பிரதேச உரிமையையும் அத்துமீறும் செயல் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.

தாக்குதல் அரசாங்க ஆதரவு பயங்கரவாதம் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி (Sheikh Mohammed bin Abdulrahman al-Thani) கூறினார்.

காஸா போர் தொடர்பில் கத்தார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும், பின்வாங்காது என்று அவர் உறுதியளித்தார்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்