Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லெபனான் மீது தரைத் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்

வாசிப்புநேரம் -
லெபனான் மீது தரைத் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்

Reuters

இஸ்ரேல் லெபனான் மீது தரைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.

மத்திய கிழக்கில் போர் பெரிதாகிறது.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பதாக இதற்குமுன் வெளிவந்த தகவல்கள் கூறின.

இஸ்ரேல் லெபனானுக்குள் தரைப்படையை அனுப்பவிருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

அது கட்டுப்படுத்தப்பட்ட தரைப்படைத் தாக்குதலாக இருக்கும் என்று அமெரிக்கா கூறுகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலின் வடக்கில் லெபனான் எல்லையோரத்தில் மூன்று வட்டாரங்களை இஸ்ரேலிய ராணுவம் மூடிய பிறகு தரைத் தாக்குதல் பற்றிய தகவல் வெளியானது.

லெபனான் இஸ்ரேலிய எல்லையில் இருந்து அதன் படைகளை மீட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தெற்கில் காஸா மீது தாக்குதலை நடத்தும் இஸ்ரேல், இப்போது வடக்கில் இரண்டாவது போர்முனையைத் திறக்கிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்