Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலிய மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் வரை COVID-19 நோயால் பாதிக்கப்படலாம்: இஸ்ரேலியப் பிரதமர்

இஸ்ரேலிய மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்படலாம் என்று பிரதமர் நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

இஸ்ரேலிய மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்படலாம் என்று பிரதமர் நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட தரவுகளின்படி, இஸ்ரேலிய மக்களில் மேலும் 2 முதல் 4 மில்லியன் பேர் வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்படலாம் என்று பிரதமர் பென்னெட் Twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்தில் பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, அதற்கும் முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில், 4 மடங்கு அதிகரித்துள்ளது.

அங்கு நேற்று முன்தின நிலவரப்படி, ஒரே நாளில் 17,518 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறைவான கிருமித்தொற்றுப் பரிசோதனை நிலையங்களே உள்ளதால் அவற்றில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு மாண்டோர் எண்ணிக்கை 8,269.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்