இஸ்ரேல் தேர்தல் - அரசாங்கம் யார் கையில்?
வாசிப்புநேரம் -
(படம்: Ilia YEFIMOVICH / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இஸ்ரேல் தேர்தலில் சுமார் 85 விழுக்காட்டு வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் (Benjamin Netanyahu) கூட்டணி சற்று முன்னணியில் உள்ளது.
ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
திரு நெட்டன்யாஹுவும் எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டும் (Gadi Eisenkot) தாங்கள் அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போவதாகக் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை.
திரு நெட்டன்யாஹுவின் வலசாரி கூட்டணி 53 இடங்களையும் திரு ஐசென்கோட்டின் எதிர்த்தரப்புக் கூட்டணி 48 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரபுக்கட்சிகள் 19 இடங்களில் முன்னணி வகிக்கின்றன. அவை எதிர்த்தரப்புக்கு ஆதரவாக இருக்கின்றன.
இறுதி முடிவுகளில் மாற்றம் வரலாம்.
இதற்கிடையே இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்ஸொக் (Isaac Herzog) மீண்டும் வாக்களிப்பு நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : AFP