Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லெபனான் மீது மீண்டும் தீவிரத் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்

வாசிப்புநேரம் -
இஸ்ரேல், லெபனான் மீது தீவிரத் தாக்குதலைத் தொடர்கிறது.

ஈரான் தாக்குதல் நடத்திய சில மணிநேரத்தில் இஸ்ரேல் லெபனான் மீதான் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.

மத்திய கிழக்கு நெடுகிலும் கடுந்தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

லெபனான் மீது தரைத் தாக்குதலை நேற்றுத் (1 அக்டோபர்) தொடங்கிய இஸ்ரேல், ஹிஸ்புல்லா படையினரை மட்டும் குறிவைத்து, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தரைப்படை இறங்கும் என்று கூறியது.

இஸ்ரேலுக்கு அருகே உள்ள எல்லையோரங்களில் சுமார் 30 கிராமங்களைக் காலி செய்யும்படி லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கிராமங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது அக்டோபர் ஏழாம் தேதி தாக்குதலைப் போல் ஒரு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா திட்டமிடுவதாக இஸ்ரேல் சொல்கிறது.

இஸ்ரேல்- லெபனான் சண்டையில் 1,800க்கும் அதிகமானோர் மாண்டனர்.

பெரும்பாலான மரணங்கள் இந்த ஒரு வாரத்தில் இடம்பெற்றன.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்