காஸாவில் இஸ்ரேல் ஆகாயத் தாக்குதல் - 2 மாதக் குழந்தை உட்பட 80 பேர் மரணம்
வாசிப்புநேரம் -
(படம்: BASHAR TALEB / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று (14 மே) நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் சுமார் 80 பேர் மாண்டனர்.
காஸாவின் வடக்கில் உள்ள ஜபலியா நகர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு மாண்டோரில் பெரும்பாலோர் பெண்களும் பிள்ளைகளும் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினர்.
இரண்டு மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கத்தார் அந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமரசப் பேச்சில் முக்கியப் பங்குவகிக்கும் கத்தார், இஸ்ரேல் சண்டை நிறுத்த உடன்பாட்டில் ஆர்வமில்லை என்பது போல நடந்துகொள்வதாய்க் கூறியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மத்திய கிழக்குப் பயணத்தை நிறைவுசெய்தவுடன் இஸ்ரேல் தற்காப்புப் படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாய்க் கூறப்படுகிறது.

ஆதாரம் : Reuters