Skip to main content
போக்குவரத்து கேமரா மூலம் கமேனியைக் கண்டுபிடித்த இஸ்ரேல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போக்குவரத்து கேமரா மூலம் கமேனியைக் கண்டுபிடித்த இஸ்ரேல்

வாசிப்புநேரம் -
போக்குவரத்து கேமரா மூலம் கமேனியைக் கண்டுபிடித்த இஸ்ரேல்

(படம்: AFP)

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) இருந்த இடத்தை இஸ்ரேல் எப்படி கண்டுபிடித்தது என்ற கேள்விக்குப் பதில் வந்திருக்கிறது.

தெஹ்ரான் (Tehran) போக்குவரத்து கேமராக்களை இஸ்ரேல் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.

திரு கமேனி கடந்த சனிக்கிழமை (28 பிப்ரவரி) அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தெஹ்ரானிலுள்ள கேமராக்கள் அரசாங்கக் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதி.

இது ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்டறிய உதவுகிறது.

அந்த வலையமைப்பை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் (Mossad) ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் அந்தக் கேமராக்களை ஊடுருவும் வாய்ப்பைப் பெற்றுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

திரு கமேனியின் பாதுகாப்புக் குழு கார்களை எங்கு நிறுத்துகிறது என்பதைக் காட்டும் ஒரு குறிப்பிட்ட கேமராவையும் இஸ்ரேல் கண்டறிந்தது.

அதன் மூலம் காவலர்களின் முகவரிகள், வேலை நேரம், அவர்கள் யாரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை இஸ்ரேல் திரட்டியது.

தாக்குதல் நடத்தப்பட்ட நாளில், திரு கமேனி படுகொலை செய்யப்பட்ட தெஹ்ரானின் பாஸ்ச்சுர் ஸ்ட்ரீட்டில் (Pasteur Street) தொலைத்தொடர்புச் சேவையை இஸ்ரேலும் அமெரிக்காவும் முடக்கின. இதனால் மெய்க்காப்பாளர்களை யாரும் அணுக முடியாத சூழல் ஏற்பட்டது.

ஈரான் குறித்துத் திரட்டிய மலை போன்ற தகவல்களை ஆராய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியது.

அதற்கென ஒரு தனிப்பிரிவே இயங்கியதாகக் கூறப்படுகிறது.

உளவு சொல்ல உள்ளே ஆள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அது பற்றி மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

திரு கமேனியின் நடமாட்டத்தை நெருக்கமாகக் கண்காணித்து வந்த CIA சனிக்கிழமை காலையில் அவர் வீட்டில் இருப்பார் என்ற தகவலை அறிந்தது.

அதே நாள், அதே இடம், அதே நேரத்தில் மூத்த ஈரானியத் தலைவர்கள் சிலரும் கூடுவதாக இருந்தனர். இந்த உளவுத்தகவலை CIA இஸ்ரேலுக்கு அனுப்பியது.

அந்தத் தகவலை வைத்து தாக்குதல் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்