இஸ்ரேல்-காஸா சண்டை நிறுத்தம் - "நம்பிக்கை தரவில்லை" என்கிறது கத்தார்
REUTERS/Alexander Ermochenko
இஸ்ரேல்- காஸா போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட அண்மைப் பேச்சுகள் நம்பிக்கைத் தரவில்லை என்று கத்தார் கூறியுள்ளது.
இருதரப்புக்கும் இடையே கத்தார் சமரசப் பேச்சை வழிநடத்துகிறது.
தாம் நம்பிக்கையுடன் இருந்தாலும் காலம் நமக்கு ஆதரவாக இல்லை என்று கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி (Sheikh Mohammed bin Abdulrahman al-Thani) கூறினார்.
இந்நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu), ராஃபா எல்லைக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிருப்பதாய்க் கூறியிருக்கிறார்.
திட்டத்தைக் கைவிடும்படி அனைத்துலக அளவில் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
எனினும் "ராஃபாவில் தாக்குதலின்றி வெற்றியில்லை," என்று திரு. நெட்டன்யாஹூ கூறினார்.
சண்டை நிறுத்த உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள தடைக்கு ஹமாஸ் இஸ்ரேலைக் குறைகூறியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து, கத்தார் ஆகியவற்றின் அதிகாரிகள் கைரோவில் நடக்கும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.