Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவிலிருந்து இரு பிணையாளிகளின் உடல் மீட்பு: இஸ்ரேலியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹமாஸ் பிடியில் இருந்த இரு பிணையாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது இருவரும் மாண்டதாகவும் அவர்களின் உடல் காஸாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் 72 வயது காட் ஹக்காய் (Gad Haggai) மற்றும் 70 வயது ஜூடி வெய்ன்ஸ்டைன் ஹக்காய் (Judy Weinstein Haggai).

இருவரும் அமெரிக்கா, இஸ்ரேல் இரு குடியுரிமைகளையும் கொண்டவர்கள்.

இருவரின் உடல்களும் காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவமும் ஷின் பெட் பாதுகாப்பு அமைப்பும் குறிப்பிட்டன.

மாண்ட தம்பதிக்கு 4 பிள்ளைகளும் 7 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

2023ஆம் ஆண்டுத் தாக்குதலின்போது 251 பேரை ஹமாஸ் பிடித்துவைத்தது.

அவர்களில் இன்னும் 55 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

அவர்களில் 32 பேர் மாண்டுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்