இஸ்ரேல் - லெபனான் சண்டைநிறுத்தத்துக்கு ஒப்புதல்
(படம்: KAWANT HAJU / AFP)
இஸ்ரேலும் லெபனானும் சண்டைநிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன.
வாஷிங்டனில் பேச்சு நடந்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு வட்டாரத்தைத் தாக்கப் போவதாக இஸ்ரேல் இதற்குமுன் கூறியது.
சண்டைநிறுத்தத்தால் அதை நிறுத்தி வைத்திருக்கிறது.
ஏப்ரல் மாதம் இருதரப்பும் சண்டைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அது சென்ற மாதம் (மே) வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால் வன்முறை தொடர்ந்தது.
லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அங்கு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அது சொன்னது.