Skip to main content
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஈரானின் ராணுவத் தளபதி மரணம்

வாசிப்புநேரம் -
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஈரானின் ராணுவத் தளபதி மரணம்

படம்: AP/Vahid Salemi

ஈரானின் அணுவாயுதத் தளத்தைத் தாக்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

ஈரான் சில நாள்களிலேயே 15 அணுக்குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான வளங்களைக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கூறினார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) குடியிருப்பு வட்டாரங்கள் உட்படப் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் கூறியது.

தாக்குதல் நடான்ஸ் (Natanz) நகரிலுள்ள அணுவாயுதத் தளத்தில் நடந்தது என்று ஊடகம் கூறியது.

தாக்குதலில் ராணுவத் தளபதி ஹுசேன் சலாமியும் (Hossein Salami) அணுச்சக்தி விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டதாக அது சொன்னது.

இந்நிலையில் ஈரானிடமிருந்து பதிலடியை எதிர்பார்த்து இஸ்ரேல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த ஆதரவும் கொடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ கூறினார்.

ஓமானில் ஈரானும் அமெரிக்காவும் அணுச்சக்தி குறித்து வரும் ஞாயிறன்று ஆறாவது சுற்றுப் பேச்சை நடத்தவிருக்கின்றன.

பேச்சில் இதுவரை முன்னேற்றம் இல்லை.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்