புதிய இஸ்ரேலிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி
(படம்: Ilia YEFIMOVICH / AFP)
This audio is generated by an AI tool.
இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் (Isaac Herzog) பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
கட்சிப் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்துகிறார்.
சென்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தார்.
அதற்கு அவர் அரபுக் கட்சிகளைச் சாடினார்.
வெளிநாட்டு ஆதரவுடன் அவை தேர்தலில் வெற்றிகண்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
அரபுக் கட்சிகள் இம்முறை வரலாறு காணாத வெற்றியைப் பதிவுசெய்தன.
தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லையென்று இஸ்ரேலின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சென்ற மாத இறுதியில் நடந்த தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதிபர் ஹெர்ஸாக் அனைத்துத் தரப்புகளுடனும் ஆலோசனை நடத்துவார்.
பின்னர் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு ஆக அதிக சாத்தியம் கொண்ட ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பார்.
அது திரு நெட்டன்யாஹு அல்லது எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டாக (Gadi Eisenkot) இருக்கக்கூடும்.
யாராலும் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்றால் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் மீண்டும் தேர்தல் நடைபெறும்.