Skip to main content
பெய்ரூட் நகரில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பெய்ரூட் நகரில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

வாசிப்புநேரம் -
பெய்ரூட் நகரில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

படம்: AFP

இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்புடன் தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் தாக்குதல் இது.

தெற்கில் ரத்வான் படையின் தளபதி ஒருவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

சம்பந்தப்பட்டவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் ஹிஸ்புல்லா அமைப்போ இஸ்ரேல் ராணுவமோ அதை உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடப்பில் உள்ள சண்டைநிறுத்த ஒப்பந்தத்தில் ஈரானின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று லெபனான் சண்டைநிறுத்தம்.

ஈரான் போரை நிரந்தரமாக நிறுத்தும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் புதிய தாக்குதல், அமெரிக்க – ஈரான் பதற்றத்தை மேலும் மோசமாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்