"அதிபர் டிரம்பின் முடிவை ஆதரிக்கிறோம், ஆனால்...." : இஸ்ரேல்
படம்: Ronen Zvulun/AFP
This audio is generated by an AI tool.
ஈரான் மீது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதன் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சண்டை நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் சில உத்தரவாதங்கள் தேவை என்று அது சொன்னது.
ஈரான் இனி ஒருபோதும் அமெரிக்கா, இஸ்ரேல், அண்டை அரபு நாடுகளுக்கு அணுவாயுத, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கும் இஸ்ரேல் ஆதரவளிப்பதாகக் கூறியது.
வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் இந்த இலக்குகளை அடைய அமெரிக்கா உறுதிகொண்டிருப்பதாகத் தங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது.
ஆயினும், இந்த இரண்டு வாரக் காலப் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்று இஸ்ரேல் கூறியது.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) இந்தப் போர் நிறுத்தம் லெபனானையும் உள்ளடக்கியது என்று தெரிவித்திருந்தார்.