Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"பதிலடித் தாக்குதல் மோசமாக இருக்கும்": ஈரானை எச்சரித்த இஸ்ரேல்

வாசிப்புநேரம் -
 "பதிலடித் தாக்குதல் மோசமாக இருக்கும்": ஈரானை எச்சரித்த இஸ்ரேல்

(படம்: AP/Julia Demaree Nikhinson)

ஈரானுக்குக் கொடுக்கும் பதிலடி மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது எப்போது, எப்படிப் பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என்பதை இஸ்ரேல் தீர்மானிக்கும் என இஸ்ரேலின் ஐக்கிய நாட்டு நிறுவனத் தூதர் டேனி டேனோன் (Danny Danon) கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளைப் பாய்ச்சி ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து அவர் பேசினார்.

ஈரானின் அந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இஸ்ரேலில் சுமார் 10 மில்லியன் மக்கள் வெடிகுண்டுக் காப்பறைகளுக்குள் நுழையும் சூழ்நிலை ஏற்பட்டது.

"இஸ்ரேலின் ஆற்றலைச் சோதித்துப்பார்க்க வேண்டும். ஆற்றல் என்ன என்பதை இஸ்ரேல் கடந்த காலங்களில் நிரூபித்துள்ளது. அதனை மீண்டும் நிரூபிக்கும்" என்றார் டேனி.

போரைத் தீவிரமாக்கும் எண்ணம் இல்லை; ஆனால் பொதுமக்கள் தாக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
 
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்