Skip to main content
டிரம்ப்பின் அமைதித் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டிரம்ப்பின் அமைதித் திட்டம் - செயல்படுத்தத் தயாராகும் இஸ்ரேல்

வாசிப்புநேரம் -
டிரம்ப்பின் அமைதித் திட்டம் - செயல்படுத்தத் தயாராகும் இஸ்ரேல்

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இஸ்ரேலிய ராணுவம் அமெரிக்காவின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகிவருகிறது.

அதிபர் டோனல்ட் டிரம்ப் வரைந்த அந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது.

இஸ்ரேலிய ராணுவத் தலைவர் நேற்றிரவு ராணுவ, புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார்.

காஸா பிரச்சினையில் அண்மை நடப்புகள் குறித்து அதில் ஆராயப்பட்டதாக தற்காப்புத் துறை அறிக்கை சொன்னது.

பிணையாளிகள் , காணாமற்போனவர்களை மீட்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

திட்டத்தின் முதற்கட்டத்தைச் செயல்படுத்தும்போது இஸ்ரேலியத் துருப்புகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது.

தேவைப்பட்டால் துருப்புகள் மீண்டும் சண்டையிடத் தயாராக இருக்கவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்