Skip to main content
flydubai விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

flydubai விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சி - இணை விமானி மீது விசாரணை

வாசிப்புநேரம் -
flydubai விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சி - இணை விமானி மீது விசாரணை

படம்: REUTERS/Ammar Awad

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Oct 2026 09:31AM புதுப்பிப்பு : 03 Oct 2026 02:24PM
இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்த flydubai விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் இணை விமானியை அந்நாட்டு அதிகாரிகள் விசாரிக்கவிருக்கின்றனர்.

அவர் அவ்வாறு செய்ய முயன்றபோது விமானியும் பயணிகளும் அவரைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

FZ1073 என்ற எண் கொண்ட விமானத்தில் 170க்கும் அதிகமானோர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இஸ்ரேலின் எந்த அமைப்பு விசாரணையை நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நடந்தவற்றைக் கண்டறிய அந்த விசாரணை முக்கியம் என்று flydubai நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 30) துபாயிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) சென்று கொண்டிருந்த விமானத்தின் இணை விமானி, விமானியைக் கத்தியால் குத்தினார்.

பயணிகளும் சிப்பந்திகளும் இணை விமானியைக் கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்தபோது, விமானத்தில் 170க்கும் அதிகமான பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் இருந்தனர்.

விமானம் பின்னர் சவுதி அரேபியாவின் தபூக் (Tabuk) நகரில் அவசரமாகத் தரையிறங்கியது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்