Skip to main content
ஐக்கிய நாட்டுச் சபையில் இஸ்ரேலியப் பிரதமர் பேச்சு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஐக்கிய நாட்டுச் சபையில் இஸ்ரேலியப் பிரதமர் பேச்சு

வாசிப்புநேரம் -
ஐக்கிய நாட்டுச் சபையில் இஸ்ரேலியப் பிரதமர் பேச்சு

படம்: Carlos Barria/Reuters

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு பாலஸ்தீன தனிநாட்டை ஆதரிக்கும் நாடுகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையில் அவர் பேசினார்.

அவர் பேசும்போது பல பேராளர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பொது மக்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை நினைவுகூர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் பேசினார்.

உலகம் அந்த நாளை மறந்துவிட்டாலும் இஸ்ரேல் மறக்கவில்லை என்றார் அவர்.

தலைவர்கள் சிலர் பயங்கரவாதத்தை ஊக்குவித்து யூதர்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பதாகத் திரு நெட்டன்யாஹு கூறினார்.

பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் அண்மையில் பாலஸ்தீன வட்டாரத்தைத் தனி நாடாய் அங்கீகரித்தன.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்