Skip to main content
துருக்கியேவின் இஸ்தான்புல் நகர மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துருக்கியேவின் இஸ்தான்புல் நகர மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
துருக்கியேவின் இஸ்தான்புல் நகர மேயர்  மீது ஊழல் குற்றச்சாட்டு

(Yasin Akgul/AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துருக்கியேவின் இஸ்தான்புல் நகர மேயர் இக்ரம் இமாமோலோ (Ekrem Imamoglu) முறையாகக் கைது செய்யப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

அவர் கடந்த புதன்கிழமை (19 மார்ச்) முதல் தடுப்புக்காவலில் இருக்கிறார்.

அதிபர் ரிசப் தயிப் எர்துவானின் அரசியல் எதிரி திரு இமாமோலோ.

2028 அதிபர் தேர்தலில் அவர் கடும்போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வேட்பாளராக அவர் தெரிவு செய்யப்படுவதற்கு ஒருசில நாள் இருக்கும்போது கைதாகியிருக்கிறார்.

தம் மீதான ஊழல் குற்றச்சாட்டைத் திரு இமாமோலோ மறுக்கிறார்.

அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட இந்த நான்கு நாளில் துருக்கியேவில் பத்தாண்டு காணாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்