Skip to main content
எரிமலை ஏறுவது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எரிமலை ஏறுவது - எப்போதுமே ஆபத்தானதா?

வாசிப்புநேரம் -
எரிமலை ஏறுவது - எப்போதுமே ஆபத்தானதா?

(படம்: Pixabay)

இந்தோனேசியாவின் டுக்கோனோ (Dukono) எரிமலை அண்மையில் வெடித்ததில் இரண்டு சிங்கப்பூரர்கள் மாண்டதைத் தொடர்ந்து எரிமலை ஏறுவதன் பாதுகாப்பைப் பற்றிப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எரிமலை ஏறுவது எப்போதும் ஆபத்தானதா? பாதுகாப்பான முறையில் எரிமலையை ஏற முடியுமா?

குமுறும் எரிமலை எப்போது வெடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாததால் அவற்றில் ஏறுவது ஆபத்து என்று இந்தோனேசியாவின் பாண்டுங் பல்கலைக்கழகப் பேராசிரியர் மிர்ஸாம் அப்துர்ரஹ்மான் (Mirzam Abdurrachman) கூறினார்.

எரிமலை வெடித்தால் அதிலிருந்து கசியும் குழம்பைவிட (lava) சாம்பல், மேலிருந்து விழும் கற்கள், சேற்று வெள்ளம் ஆகியவை மலையேறிகளுக்குக் கூடுதல் ஆபத்தை உண்டாக்கலாம்.

தினசரி வெடிக்கும் எரிமலைகளால் அதிக ஆபத்தில்லை என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெனுவா டெய்ஸ்னெ (Benoit Taisne) கூறினார்.

அத்தகைய எரிமலையை ஏறும்போது வெடிப்பு ஏற்படும் பகுதிக்கு அருகே மலையேறிகள் செல்லமாட்டார்காள் என்று அவர் விளக்கினார்.

Related article image
envato elements

எரிமலை ஏறும்போது எப்படிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது?

1. அதிகாரபூர்வ இணையத்தளங்களை நாடவும்

2. மிதமான எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் எரிமலை ஏறுவதைத் தவிர்க்கவேண்டும்

3. அனுபவமிக்க, தகுதிபெற்ற வழிகாட்டிகளின் உதவியோடு ஏறவேண்டும்

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்