"பீட்ஸாவில் அன்னாசியா?" மறுத்த சமையல்காரர் வேலையிலிருந்து நீக்கம்
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
"பீட்ஸாவில் அன்னாசிப்பழமா? அது என் கலாசாரத்திற்கே அவமானம்!"
எனக் கொதித்தெழுந்த இத்தாலியச் சமையல் வல்லுநர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரில் அந்தச் சம்பவம் நடந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
டேவிட் டம்புரெல்லா (Davide Tamburella) அங்குள்ள La Costa உணவகத்தில் பணிபுரிந்தார்.
விருந்தினர்களுக்கு பீட்ஸாவில் அன்னாசிப்பழமும் இறைச்சியும் வைக்க அவர் மறுத்ததாகக் கூறப்பட்டது,
4 ஆண்டுகளில் அவர் பீட்ஸாவில் பழங்கள் பயன்படுத்த மறுத்தது அது 3ஆவது முறை.
தகாத சொற்கள் பயன்படுத்தியது உள்ளிட்ட மேலும் சில குறைகூறல்கள் அவர்மீது வைக்கப்பட்டன.
மே மாதம் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
தாம் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லி அவர் ஆஸ்திரேலியாவின் Fair Work ஆணையத்திடம் உதவி நாடினார்.
அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அந்த உணவகமும் மூடப்பட்டுவிட்டது.
அவர் தற்போது பிரிஸ்பேன் நகரில் வேறோர் உணவகத்தில் பணிபுரிவதாக BBC தெரிவித்தது.
அங்கு உணவு வகைகளில் அன்னாசிப்பழம் கிடையாது.