இந்திய ஊழியர் காயம் - முதலாளிக்கு 16 ஆண்டுச் சிறை
வாசிப்புநேரம் -
(படம்: X / @DAVIDEFARAONE)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இத்தாலியில் காயமடைந்த இந்திய ஊழியருக்கு உதவ மறுத்த முதலாளிக்கு 16 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சம்பவம் நடந்தது.
இயந்திரம் ஒன்றினால் இந்தியாவைச் சேர்ந்த 31 வயது சட்னம் சிங்(Satnam Singh) கை துண்டிக்கப்பட்டது.
அவரது கால்களும் நசுங்கின.
அவர் வேலை செய்வதற்கு முறையான ஆவணங்கள் இல்லாத சட்டவிரோத ஊழியர்.
அவரது முதலாளி அண்டோனல்லோ லொவாட்டோ (Antonello Lovato) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
சிங்கையும் அவரது மனைவியையும் சாலை ஓரத்தில் விட்டுவிட்டு லொவாடோ சென்றுவிட்டார்.
இரு நாள் கழித்து சிங் காயங்களால் மாண்டார்.
39 வயது லொவாடோவிற்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர்கள் வாதாடினர்.
சிங் உடனே காப்பாற்றப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்று அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டது.
அந்தச் சம்பவம் இத்தாலியில் பெரிய அளவில் பேசப்பட்டது.
நாட்டின் பண்ணைகளில் வேலை செய்யும் ஆவணமில்லாத ஊழியர்களின் வேலைச் சூழல் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ரோம் நகருக்குத் தெற்கே இருக்கும் லடீனா (Latina) எனும் கிராமத்தில் பண்ணைகளில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் நியாயம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதாரம் : AFP