Skip to main content
"உணவுத் தயாரிப்பின் மரபுடைமை மறையக்கூடும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"உணவுத் தயாரிப்பின் மரபுடைமை மறையக்கூடும்" - செயற்கை வழியில் உற்பத்தியாகும் உணவுக்கு இத்தாலி தடை விதிக்கக்கூடும்

வாசிப்புநேரம் -
இத்தாலி ஆய்வுக்கூடங்களில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களுக்குத் தடைவிதிக்க முற்படுகிறது.

அதற்கான மசோதாவுக்கு இத்தாலிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசாங்கம் நாட்டின் வேளாண்-உணவு மரபுடைமையைக் காக்க முனைகிறது.

இத்தாலியில் குறிப்பாக இறைச்சி வகை உணவுகள் அதிகம் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. அவற்றுக்கெனவே சிறப்புத் தயாரிப்பு முறைகள் காலங்காலமாகப் பின்பற்றப்படுகின்றன.

எனவே ஆய்வுக்கூடங்களில் செயற்கை வழியாக உருவாகும் உணவுப்பொருள்களால் இத்தாலியின் உணவுத்தயாரிப்பு வழக்கங்கள் மறையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

செயற்கை வழியில் உணவுப்பொருள்களைத் தயாரிப்பதற்கு எதிராக நடப்புக்கு வரக்கூடிய தடையை மீறுவோருக்கு 65,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்