Skip to main content
ஈரானில் பள்ளி மீது தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானில் பள்ளி மீது தாக்குதல் - இத்தாலியப் பிரதமர் கடும் கண்டனம்

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்குப் போர் தொடங்கியபோது ஈரானில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் பெண் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சொன்னார்.

போரின் முதல் நாளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் பள்ளி மீது கொடூர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்போ (Donald Trump) தெஹ்ரானைக் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

இஸ்ரேலோ, இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியிருக்கிறது.

தாக்குதலில் பலியானோரின் உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை.

ஆனால் குறைந்தது 165 பேருக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்