லிவர்பூல் அணி வீரர் டியாகோ ஜோட்டா - கார் விபத்தில் மரணம்
வாசிப்புநேரம் -

(படம்: Reuters/Phil Noble)
லிவர்பூல் அணியின் முன்கள ஆட்டக்காரர் டியாகோ ஜோட்டா (Diogo Jota) ஸ்பெயினின் ஸமோரா (Zamora) நகர் அருகே நடந்த கார் விபத்தில் மாண்டார்.
ஸ்பெயின் தேசிய தொலைக்காட்சி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
போர்ச்சுகல் நாட்டவரான 28 வயது டியாகோ UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டியில் இருமுறை வென்றுள்ளார்.
லிவர்பூல் அணிக்காக 49 ஆட்டங்களில் விளையாடி 14 கோல்களைப் போட்டுள்ளார்.
பிரிமியர் லீக், FA கிண்ணப் போட்டி, EFL கிண்ணப் போட்டி ஆகியவற்றில் வென்ற லிவர்பூல் அணியில் அவர் விளையாடியிருக்கிறார்.
சென்ற மாதம் 22ஆம் தேதி திருமணம் செய்துகொண்டதாக டியாகோ தம் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆதாரம் : AGENCIES