பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்
வாசிப்புநேரம் -
Image: Rishab Tatiraju
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.
அவருக்கு வயது 88.
"தென்னிந்தியாவின் வானம்பாடி" என்று போற்றப்பட்டவர் திருவாட்டி ஜானகி.
1962ஆம் ஆண்டு "கொஞ்சும் சலங்கை" திரைப்படத்திற்காக அவர் பாடிய "சிங்கார வேலனே தேவா" பாடல் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
60 ஆண்டுகளுக்கும் மேல் திரை இசையுலகில் முத்திரை பதித்த திருவாட்டி ஜானகி 48,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பின்னணிப் பாடல் உலகில் தனக்கென எப்போதும் தனியிடம் கொண்டிருந்தார் அவர்.
பல்வேறு வயதினரையும் கவர்ந்தது அவரது வசீகரிக்கும் குரல்.
"ஜானகி அம்மா" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
மிக உயர்ந்த சுருதியில் பாடக்கூடிய, தனிச்சிறப்பு வாய்ந்த குரலைக் கொண்டவர் என்று போற்றப்பட்டார்.
இசையமைப்பாளர்கள் இளையராஜா, M.S. விஸ்வநாதன், AR ரஹ்மான் ஆகியோரது இசையில் பல பாடல்களைப் பாடி மக்கள் மனம் கவர்ந்தார்.
திருவாட்டி ஜானகியின் பேத்தி அவர் மறைந்த தகவலை சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
பாட்டியின் மறைவை கனத்த மனத்துடன் தெரிவிப்பதாகச் சொன்ன அவர், குடும்பத்தினர் அவரது மறைவுக்குத் தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
திருவாட்டி ஜானகி குடும்பத்தினரின் தனிமையை புரிந்துணர்வுடன் மதிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் திருவாட்டி ஜானகியின் மறைவுக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

ஆதாரம் : Mediacorp Seithi