Skip to main content
6 மணி நேரத்தில் கட்டப்பட்ட ஜப்பான் ரயில் நிலையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

6 மணி நேரத்தில் கட்டப்பட்ட ஜப்பான் ரயில் நிலையம்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் 6 மணி நேரத்தில் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இது ஒரு புதிய உலகச் சாதனை.

அரிடா நகரத்தில் மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் ரயில் நிலையத்தைக் கட்டியது.

ஹட்சுஷிமா ரயில் நிலையம் முப்பரிமாண அச்சு (3D printing) வரைபடத்தைக் கொண்டு கட்டப்பட்டது.

பழைய மரத்தால் ஆன ரயில் நிலையம் 1948இல் கட்டப்பட்டது. அதற்குப் பதில் புதிய நிலையம் எழுந்துள்ளதாக Hindustan Times செய்தி கூறுகிறது.

தினசரி சுமார் 530 பயணிகள் அந்த ரயில் நிலையத்துக்கு வருகின்றனர்.

புதிய தொழில்நுட்பத்தால் பல மாதங்களாக ரயில் நிலையத்தைக் கட்டிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒரே நாளில் வேலை முடிந்துவிட்டது. ரயில் சேவையிலும் எந்தத் தடையும் இல்லை.

ஜப்பானில் இப்போது முதியோர் எண்ணிக்கை அதிகம்.

முப்பரிமாண அச்சு போன்ற புதிய தொழில்நுட்பங்களால் கட்டுமானத் துறையில் ஊழியர் தேவை குறைந்துவிடும் என்று Hindustan Times குறிப்பிடுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்