Skip to main content
ஜப்பானில் ரயிலை நிறுத்திய பாம்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானில் ரயிலை நிறுத்திய பாம்பு

வாசிப்புநேரம் -
ஜப்பானின் ஆகப் பரபரப்பான அதிவேக ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது...

ஒரு பாம்பு மின்சார விநியோகக் கம்பிவடத்தில் சிக்கிக்கொண்டதால்...

நேற்று முன்தினம் (30 ஏப்ரல்) மாலை சுமார் 5.25 மணிக்குத் தோக்கியோவுக்கும் ஒசாகாவிற்கும் இடையே ஓடும் அதிவேக ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இரவு 7 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடர்ந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதிகாரிகள் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயணிகள் ரயில் நிலையத்தில் கூடியதாகக் கூறப்படுகிறது.

ரயில் நுழைவுச்சீட்டுகளைப் பெறும் இயந்திரங்களிலும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டதாக BBC சொன்னது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்