Skip to main content
ஜப்பானைக் கொளுத்தும் வெயில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானைக் கொளுத்தும் வெயில்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் வெயில் கொளுத்துகிறது.

நேற்று (21 மே) சில பகுதிகளில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.

வடகிழக்கே புக்குஷிமா (Fukushima) பகுதியிலிருந்து மேற்கே ஹியொகொ (Hyogo) வரை விரைவில் வெப்பம் 34 டிகிரி செல்சியஸைத் தொடலாம்.

தெற்கே யேயாமா (Yaeyama) வட்டாரத்தில் முதன்முறை அனல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவ்வப்போது தண்ணீர் அருந்தும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மிதமிஞ்சிய சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைக்கு ஏற்ப, தோக்கியோவாசிகளுக்குத் ண்ணீருக்கான அடிப்படைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு மாதத்துக்கு 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள்ள மானியத் திட்டம் நடப்பிலிருக்கும்.

செலவைக் குறைப்பதற்காக மக்கள் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்று கவலைப்படுகிறார் தோக்கியோ ஆளுநர்.

சென்ற ஆண்டு கோடையின்போது மக்கள் வீடுகளில் குளிரூட்டியை அணைத்து வைத்தனர். வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சிலர் மாண்டனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்