ஏன் ஜப்பான் அமெரிக்க கார்களை வாங்குவதில்லை?
வாசிப்புநேரம் -

(படம்: Reuters)
ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) புதிய வரிகள் குறித்து அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவின் ஆகப் பெரிய முதலீட்டாளராக ஜப்பான் திகழ்கிறது. புதிய வரியால் இனி முதலீடு செய்யும் உத்வேகம் குறைய வாய்ப்புள்ளதாகத் திரு ஷிகெரு இஷிபா அமெரிக்க அதிபரிடம் கூறினார்.
பேரப் பேச்சைத் தொடர்வதற்கு இருதரப்பும் அமைச்சர்களை நியமிக்க இணங்கியிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் கூறினார்.
அமெரிக்க அதிபருடனான உரையாடல் மிகுந்த ஆக்கபூர்வமாய் அமைந்தது என்றார் திரு இஷிபா.
வர்த்தகத்தில் ஜப்பான் அமெரிக்காவை மிக மோசமாக நடத்துவதாகக் கூறிய திரு டிரம்ப், அந்த நிலை இனி மாற வேண்டும் என்றார்.
ஜப்பான் அமெரிக்காவின் கார்களை வாங்குவதில்லை. பண்ணைப் பொருள்களை இறக்குமதி செய்வதில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதெல்லாம் மாற வேண்டும் என்றார் அமெரிக்க அதிபர்.