ஜப்பானில் திடீர்த் தேர்தல்
This audio is generated by an AI tool.
ஜப்பானியப் பிரதமர் சனே தக்காயிச்சி (Sanae Takaichi) நாடாளுமன்றத்தின் கீழவையைக் கலைத்துத் திடீர்த்தேர்தலை அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
465 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டி நிலவும்.
அவரது ஆளுங்கட்சி மீது மக்களின் நம்பிக்கை சரிந்துள்ளது.
தமது அமைச்சரவை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சார்ந்தே அவர் திடீர்த்தேர்தலை நடத்தவிருக்கிறார்.
திருவாட்டி தக்காயிச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமர்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு அவர் ஆதரவு திரட்ட முனைகிறார்.