Skip to main content
15 நாள்களில் 1,300க்கும் அதிகமான நிலநடுக்கங்கள்....தொடரும் துயரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

15 நாள்களில் 1,300க்கும் அதிகமான நிலநடுக்கங்கள்....தொடரும் துயரம்

வாசிப்புநேரம் -
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

ககோஷிமா மாநிலத்தின் (Kagoshima) தொக்காரா (Tokara) தீவுக்கூட்டம் அருகே நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தாது என்று ஆய்வகம் கூறியது.

சென்ற மாதம் (ஜூன் 2025) 21ஆம் தேதி முதல் இன்றுவரை அந்த வட்டாரத்தில் 1,300க்கும் அதிகமான முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வகம் குறிப்பிட்டது.

அடுத்து வரும் நாள்களில், அவ்விடத்தில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்