Skip to main content
சீனா திரும்பும் ஜப்பான் ராட்சதப் பாண்டாக்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனா திரும்பும் ஜப்பான் ராட்சதப் பாண்டாக்கள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜப்பானின் தோக்கியோ விலங்குத் தோட்டத்தின் பிரபலமான இரு ராட்சதப் பாண்டாக்கள் இன்று (27 ஜனவரி) சீனாவுக்குத் திரும்பவுள்ளன.

இரட்டைப் பாண்டாக்களான லேய் லேயும் (Lei Lei) சியாவ் சியாவும் (Xiao Xiao) ஜப்பானில் பிறந்தவை.

அவற்றுக்கு 4 வயதாகிறது.

அவை சீனாவுக்குத் திரும்புவதாகத் திடீரென சென்ற மாதம் (டிசம்பர்) அறிவிக்கப்பட்டது.

சீனா தைவானைத் தாக்கினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடலாம் என்று ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) கூறியதை அடுத்து ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு கசப்படைந்தது.

பாண்டாக்கள் முன்கூட்டியே சீனாவுக்குத் திரும்ப அது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உண்மையில் அவை அடுத்த மாதம் (பிப்ரவரி) சீனாவுக்குத் திரும்புவது திட்டம்.

அவை தொடர்ந்து ஜப்பானில் இருக்க ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முயற்சியில் தோக்கியோ ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

1972ஆம் ஆண்டு ஜப்பானும் சீனாவும் அரசதந்திர உறவைத் தொடங்கின.

அந்த நட்பின் அடையாளமாகச் சீனா ஜப்பானுக்குப் பாண்டாக்களைக் கடனாக வழங்கியது.

சுமார் 50 ஆண்டுகளில் ஜப்பான் ராட்சதப் பாண்டாக்களின்றி இருப்பது இதுவே முதல் முறை.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்